அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன் திடீர் அறிவிப்பு

அரசியலை விட்டு வெளியேறி, தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் ஒரு மக்கள் அமைப்புடன் இணைந்து கொள்வதையே தாம் விரும்புவதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு  அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தம்மிடம் நான்கு தெரிவுகள் இருப்பதாகவும், அதில், மக்கள் அமைப்பு  ஒன்றில் இணைந்து கொள்வதே தமக்கு மிகவும் பிடித்தமானது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கூட்டமைப்பின் கொள்கை விவகாரங்கள் தொடர்பாக இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டிருந்த போதும், அந்தச் சந்திப்பு நடக்கவில்லை.

அவர் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர், சந்திப்பு நடக்கும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: செல்வன்