சயன்ஸ் அக்கடமியின் வருடாந்த கௌரவிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு

சயன்ஸ் அக்கடமியின் வருடாந்த கௌரவிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு

யாழ்ப்பாணம் சயன்ஸ் அக்கடமியின் வருடாந்த கௌரவிப்பு விழா நேற்று (13) அக்கடமி வளாகத்தில் அதன் இயக்குநர் சரா புவனேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர்  இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.

இக் கௌரவிப்பு நிகழ்வில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயர் பெறுபேறுகளையும் மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இந் நிகழ்வில் சயன்ஸ் அக்கடமி ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள், கௌரவிப்புக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிலையத்தில் கற்றுவரும்  மாணவர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: செல்வன்