திருச்சி சிறையில் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரத போராட்டம்

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் 8பேர் விடுதலை செய்யக்கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த போராட்டத்தை இன்று (திங்கட்கிழமை) காலை முதல் அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த முகாமில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சில முரண்பட்ட செயற்பாடுகளால் தாங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளவதாகவும் போராட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் பொய் வழக்கில் கைது செய்து, விடுவிக்க மறுத்து வருவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே, தங்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் வரை காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடபோவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: செல்வன்