அமலாக்கத்துறை மனு மீது டெல்லி நீதிமன்றம் நாளை தீர்ப்பு

ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் அமலாக்கத்துறை மனு மீது டெல்லி சிபிஐ நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. ப.சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்துள்ளது. Read more »

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியுள்ளது. Read more »

மின்னொளியில் மாமல்லபுரம் சிற்பங்களை கண்டுகளிக்க சென்ற மக்கள் ஏமாற்றம்

மின்னொளியில் மாமல்லபுரம் சிற்பங்களை கண்டுகளிக்க சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சிற்பங்கள் மற்றும் கடற்கரை கோயிலில் அலங்கார மின்விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, இந்துரதம் உள்ளிட்ட இடங்களை மின்விளக்கு அலங்காரத்தில் கண்டுகளிக்க... Read more »

விக்கிரவாண்டி தொகுதியில் மு.க.ஸ்டாலின் பரப்புரை

ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முன்வரவில்லை, மாநில அரசு தட்டிக்கேட்கவும் இல்லை என்று விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும்... Read more »

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வெற்றி பெறும்- கணேசன்

தமிழகத்தில் அடுத்து நடைபெறவுள்ள உள்ளூராட்சி மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி மகத்தான வெற்றி பெறுமென அதன் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இல.கணேசன்... Read more »

மாமல்லபுரத்தில் முதல்வர் பழனிச்சாமி ஆய்வு

சீன அதிபர் சுற்றிப்பார்க்கும் இடங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு நடத்தி வருகிறார். மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டு முதல்வருடன் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். Read more »

ஏழு பேர் விடுதலையை மோடியிடம் வலியுறுத்திய பாமக!

இந்திய பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வரவுள்ள நிலையில் மோடியை  தில்லியில் இன்று பாமக கட்சி மருத்துவர் ராமதாசும் , மகன் அன்புமணி அவர்களும் சந்தித்துள்ளார். இதன்போது 7 தமிழர் விடுதலை, காவிரி-கோதாவரி இணைப்பு, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்... Read more »

ப.சிதம்பரம் முன்ஜாமினை எதிர்த்த மனு நாளை விசாரணை

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை எதிர்த்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. ப.சிதம்பரம், கார்த்திக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கப்பிரிவு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அமலாக்கப்பிரிவு மேல்முறையீட்டு மனு, டெல்லி உயர்நீதிமன்ற... Read more »

சென்னை திருவொற்றியூரில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு

சென்னை திருவொற்றியூரில் ஜூவன்லால் நகரை சேர்ந்த பவானி(25) என்ற பெண் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார். மாநகராட்சி சுகாதார நடவடிக்கையை சரிவர மேற்கொள்ளாததே பெண் உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். Read more »

அல்கொய்தா அமைப்பின் இந்திய துணைக் கண்டத்தின் தலைவர் உயிரிழப்பு

ஆப்கானில் நடந்த அமெரிக்க தாக்குதலில் அல்கொய்தா அமைப்பின் இந்திய துணைக் கண்டத்தின் தலைவர் உயிரிழந்துள்ளார். தெற்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில் அமெரிக்க விமானப்படை தாக்குதலில் அசிம் உமர் கொல்லப்பட்டார். Read more »