அமெரிக்காவின் கடற்படைத் தளத்துக்குள் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் பேர்ல் துறைமுக கடற்படை கப்பல் தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அமெரிக்காவின் ஹவாய் தீவில் பேர்ல் துறைமுக கப்பல் கட்டும் தளத்தின் தெற்கு நுழைவுவாயில் ஊடாக நேற்று   மாலை மர்ம நபர்... Read more »

எந்தப் பிரதமருடனும் இணைந்து பணியாற்ற முடியும் : டொனால்ட் ட்ரம்ப்

பிரித்தானியாவில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒன்பது நாட்கள் இருக்கும் நிலையில் எந்தப் பிரதமருடனும் இணைந்து பணியாற்ற முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக லண்டனுக்கு வருகை தந்த அவர் பிரித்தானியத் தேர்தலில்... Read more »

இஸ்லாமியப் போதகர் அஞ்செம் சவுத்ரியுடன் உஸ்மான் கான் : படம் வெளியாகியுள்ளது

லண்டன் பிரிட்ஜில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி உஸ்மான் கான் இஸ்லாமிய அடிப்படைவாதப் போதகர் அஞ்செம் சவுத்ரியுடன் காணப்பட்ட படம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் மார்ச் 2009 இல் எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட தீவிரவாதக் குழு ஒன்று ஏற்பாடு... Read more »

இஸ்ரேல் – அமெரிக்க தலைவர்கள் விசேட பேச்சு

ஈரானின் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில், அணு ஆயுதம் தயாரிக்கப்பயன்படும் முக்கிய மூலப்பொருளான யுரேனியம் உற்பத்தியை ஈரான் 10 மடங்காக அதிகரித்தது. அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது எனவும்,... Read more »

நமீபியாவின் புதிய ஜனாதிபதியாக 2ஆவது தடவையாகவும் ஜெயிங்காப்

தென்மேற்கு ஆபிரிக்க நாடான நமீபியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஹேக் ஜெயிங்காப் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆளும் நமீபிய தென் மேற்கு ஆபிரிக்கா மக்கள் அமைப்பின் வேட்பாளரும், ஜனாதிபதியுமான 78 வயதான ஹேக் ஜெயிங்காப் 56 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப்... Read more »

14 நிமிடங்களில் ஹாங்காங் அழிக்கப்பட்டு இருக்கும்! டிரம்ப் அதிரடி

ஹாங்காங்கில் போராட்டத்தை நசுக்க சீனா தனது படைகளை அனுப்பிய நிலையில், தாம் தலையிட்டிருக்கா விட்டால் 14 நிமிடங்களில் ஹாங்காங் முழுவதுமாக அழிக்கப்பட்டு இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டிரம்ப், ஹாங்காங்கில் ஜனநாயகத்திற்காக நடைபெறும் போராட்டத்திற்கு... Read more »

கனடா அமைச்சரான முதல் தமிழ் இந்துப்பெண் அனிதா

ஓக்வில் தொகுதி எம்.பி.,யான அனிதா ஆனந்த், கனடா அமைச்சரவையில் பொதுசேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கனடா அமைச்சரவையில் இடம்பெறும் முதல் இந்துப் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது கூடுதல் தகவல்.... Read more »

சியாச்சின் பகுதியை இந்திய சுற்றுலாவுக்காக திறக்க முடியாது: பாகிஸ்தான்

உலகின் மிக உயர்ந்த போர்க்களப் பகுதியான சியாச்சின் ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசமாக விளங்குவதால் இந்தியா சுற்றுலா தொடங்குவதற்காக வழிதர முடியாது என்று பாகிஸ்தான் இன்று தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலையின் மீதுள்ளது சியாச்சின் பனிமலை பகுதி. ஆண்டு முழுவதும்... Read more »

பிரிட்டனுக்குள் கள்ளமாக நுழையவிருந்த 25 பேர் கொள்கலனில் இருந்து மீட்பு!

நெதர்லந்திலிருந்து புறப்பட்ட சரக்குக் கப்பலிலிருந்து பிரிட்டனுக்குள் கள்ளத்தனமாக நுழைய கொள்கலனில் இருந்த 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர். குளிரூட்டப்பட்ட கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பிரிட்டனுக்குச் செல்லவிருந்த அந்தச் சரக்குக் கப்பல் டச்சு துறைமுகத்திற்குத் திரும்பியதாகவும் அவசரச் சேவைப் பிரிவு தெரிவித்தது. அவர்களுள்... Read more »

மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மெக்ஸிகோவின், சுசியேட் பிராந்தியத்திற்கு மேற்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 26.1 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதுடன் இதனால் உண்டான சொத்து... Read more »