35 வருடங்களின் பின்னர் பிரபஞ்ச பேரழகியாக தெரிவு

இலங்கையை சேர்ந்த பெண், திருமணமாணவர்களுக்கான பிரபஞ்ச பேரழகிப் போட்டியில் (Mrs. World 2020) பிரபஞ்ச பேரழகியாக முடி சூட்டப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற உலக ராணி 2020 போட்டியிலேயே கொழும்பைச் சேர்ந்த Caroline Jurie  பிரபஞ்ச அழகியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.... Read more »

5 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை..!

பதுளை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையானது நாளை மாலை 4 மணிவரை நடைமுறையில் இருக்குமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. Mak Read more »

சாதாரணதர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சையானது, டிசம்பர் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »

கொழும்பில் குப்பை சேகரிக்கும் நேரத்தில் மாற்றம்

இன்று முதல் கொழும்பு நகரின் குப்பைகளை சேகரிக்கும் நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இனிமேல் காலை 6.30 இற்கு குப்பை சேகரிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் பாதைகளில் உள்ள குப்பைகளை... Read more »

யாழ்ப்பாண புகைப்படக் கண்காட்சி

யாழ்ப்பாண புகைப்படக் கண்காட்சி யாழ் மத்திய கல்லூரியின் தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. புகைப்படக் கலைஞர்களின் ஏற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இக் கண்காட்சியை உள்நாட்டவர்கள் வெளிநாட்டவர்கள் எனப் பெருமளவிலானோர் பார்வையிட்டு வருகின்றனர். குறிப்பாக ஐம்பது புகைப்படக் கலைஞர்களின்... Read more »

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாவாவின் 94 ஆவது ஜனன தினம்

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாவாவின் 94ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு வவுனியா சத்ய சாயி சேவா நிலையம் ஏற்பாடு செய்திருக்கும் விஷேட பூஜை, பஜனை மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகள் கு.சிவகுமாரன் தலைமையில் இன்று காலை மற்றும் மாலை நிகழ்வுகளாக... Read more »

ஜயரத்னவின் பூதவுடல் நாளை பாராளுமன்ற வளாகத்தில்

மறைந்த முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்னவின் பூதவுடல் பாராளுமன்ற வளாகத்தில் இறுதி அஞ்சலிக்காக நாளை (22) பிற்பகல் 01 மணியிலிருந்து பிற்பகல் 03 மணி வரை வைக்கப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெனாண்டோ தெரிவித்துள்ளார். இவரது இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம்... Read more »

பணவீக்கம் அதிகரித்துள்ளது…

இலங்கையின் முதன்மை பணவீக்கம் 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில், தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 5 சதவீதமாக பணவீக்கம் நிலவியது. Read more »

தாய் வெளிநாட்டில்! இலங்கையில் மாணவி எடுத்த விபரீத முடிவு

கல்நேவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சியம்பலாகமுவ பிரதேசத்தில் உயர் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் கல்நேவ மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று... Read more »

முதலாவது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பதுளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளது. 42 வயதான B.H.M. இஸ்மத் என்ற  சிறுநீரக நோயாளிக்கு சிறுநீரகங்கள் பழுதடைந்தமையினால் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகமொன்றை நன்கொடையாக... Read more »