திருமண நிகழ்வொன்றில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்-மூவர் வைத்தியசாலையில்!

பதுளையில் உள்ள பகுதியொன்றில் நடைபெற்ற திருமண நிகழ்வில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்றையதினம் (26-05-2024) தியத்தலாவை பகுதியில் இடம்பெற்றதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

திருமண நிகழ்வொன்றில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்... மூவர் வைத்தியசாலையில்! | Conflict Between 2 Group Wedding Event Badulla

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஹல்துமுல்ல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருமண நிகழ்வொன்றில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்... மூவர் வைத்தியசாலையில்! | Conflict Between 2 Group Wedding Event Badulla

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றையதினம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.   

சிறப்புச் செய்திகள்