கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய தம்பதி – பெண்களை கடத்தி நடத்தப்பட்ட மோசமான செயல்!

கொழும்பில் பெண்களை கடத்தி வலுக்கட்டாயமாக தகாத செயற்பாடுகளில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கு வருடங்களாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டமை குறித்து நுகேகொடை சிறுவர் மற்றும் பெண்கள் குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் முறையிடப்பட்டுள்ளது. .

இதற்கமைய குற்றத்தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தகாத செயல்

வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து பலவிதமான தகாத செயல்களில் ஈடுபடுத்தியுள்ளனர்.

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய தம்பதி - பெண்களை கடத்தி நடத்தப்பட்ட மோசமான செயல் | Women Kidnapped And Sale In Colombo

இவ்வாறு வந்த பெண்ணொருவரை இந்த தம்பதியினர் அடைத்து வைத்து பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தி வீடியோ எடுத்து பணத்திற்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்னர், நுகேகொடையில் உள்ள இந்த வீட்டிற்கு வந்த பதுளை மற்றும் வெலேகெதர பிரதேசங்களை சேர்ந்த இரண்டு பெண்கள் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்புச் செய்திகள்