ஆபாசப் படங்களுடன் ஆசிரியையின் புகைப்படத்தை சேர்த்த மாணவன்-பின்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

  பாடசாலை ஆசிரியை ஒருவரின் புகைப்படத்துக்கு நிர்வாண உருவத்தை பதித்ததாக கூறப்படும் பாடசாலை மாணவன் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவு, குளியாபிட்டிய நீதவான் ரந்திக லக்மால் ஜயலத்தினால் செவ்வாய்க்கிழமை (11) பிறப்பிக்கப்பட்டு வழக்கை ஓகஸ்ட் 28-ம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கவும் உத்தரவிட்டார்.

ஆபாசப் படங்களுடன் ஆசிரியையின் புகைப்படத்தை சேர்த்த மாணவன் | Student Added Teacher S Photo Pornographic

ஆபாசப் படங்கள் அடங்கிய குழு

பிணை நிபந்தனைகளை பிறப்பித்த நீதவான், விசாரணையில் தலையிட வேண்டாம் என்றும், திருத்தப்பட்ட புகைப்படங்களில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்றும் சந்தேக நபரை எச்சரித்தார்.

மாணவர் நிபந்தனைகளுக்கு இணங்காவிட்டால், பிணை ரத்து செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நிறைவடையும் வரையிலும் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் எச்சரித்தார்.

சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய குளியாபிட்டிய பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குமாரசிங்க, மாணவனின் செயலால், குறித்த ஆசிரியர் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார்.

தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் கூட இருப்பதாகக் கூறிய மகேஷ் குமாரசிங்க, சந்தேகநபர் ஆசிரியரின் தொலைபேசி இலக்கத்தைத் திருத்தி முகப்புத்தகத்திலும், டெலிகிராம் வலையமைப்பிலும் ஆபாசப் படங்கள் அடங்கிய குழுவில் பதிவிட்டதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.

சிறப்புச் செய்திகள்