யாழில் இளம் மருத்துவர் விபரீத முடிவால் உயிரிழப்பு ;வெளியான அதிர்ச்சி காரணம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக  கூறப்படுகின்றது.

சம்பவத்தில்  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் பிரேம்குமார் கிரிசாந் (30) என்பவரே உயிரை மாய்த்துள்ளார்.

யாழில் இளம் மருத்துவர் விபரீத முடிவால் உயிரிழப்பு ; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் | Doctor Dies Jaffna Point Pedro Hospital

யுவதி வழங்கிய  தகவல்

கொழும்பை சேர்ந்த மருத்துவர் , காதல் விவகாரத்தினால் உயிரை மாய்த்திருக்கலாம் என கருதப்படுகிறது. 

அதேவேளை  அவரது காதலியென கருதப்படும் யுவதியொருவர் தொலைபேசியில் வழங்கிய தகவலை வைத்தியசாலை நிர்வாகத்தினர், வைத்தியரின் விடுதி கதவை உடைத்து சென்று பார்த்த போது, வைத்தியர் சடலமாக காணப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்  அவரது மூக்கிற்குள் பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் ஏதோ ஒரு வகை மருந்தை செலுத்தி உயிரை மாய்த்திருக்கலாமென கருதப்படுகிறது.

சிறப்புச் செய்திகள்