ஏழு பேரின் உயிரை பறித்த கோர விபத்து: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச்சென்ற பேருந்து விபத்திற்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017. 11. 06 அன்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாக பயணித்த பேருந்து முந்தலை, மதுரங்குளிய பிரதேசத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியிருந்தது.

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையினால் ஏற்பட்ட இந்த விபத்தில் ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்திருந்தனர்.

ஏழு பேரின் உயிரை பறித்த கோர விபத்து: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | 2017 Colomboto Jaffna Bus Accident

தண்டனை அறிவிப்பு

இந்த விபத்து தொடர்பில் புத்தளம் மேல் நீதிமன்றில் 07 வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் 36 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட சாரதிக்கு 03 பிரிவுகளின் கீழ் 17 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் 56800 ரூபா அபராதமும் விதித்து புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஏழு பேரின் உயிரை பறித்த கோர விபத்து: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | 2017 Colomboto Jaffna Bus Accident

புத்தளம், பலவியா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபருக்கே இவ்வாறு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 1 முதல் 07 வரையிலான 07 குற்றச்சாட்டுகளுக்கு 07 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒரு வருடத்திற்கு ரூ. 35000 அபராதமும், பிரிவு 328-ன் கீழ் ரூ.100, 329 பிரிவின் கீழ் 20 குற்றச்சாட்டுகளுக்கு தலா 1800 ரூபாவும், 10 வருடங்கள் 06 மாதங்களுக்கு 20000 ரூபா வீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிறப்புச் செய்திகள்