முழு தேசத்தையும் தலைகுனிய வைத்து விட்டோம்-மன்னிப்பு கேட்ட இலங்கை வீரர்!

இந்த ஆண்டு நடைபெற்று வரும் இருபதுக்கு இருபது உலககிண்ணத் தொடரில் இலங்கை அணி, முழு தேசத்தையும் தலைகுனிய வைத்து விட்டதாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மெத்தியூஸ் (Angelo Mathews) தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றிய இலங்கை அணி, இந்த வருடம் நடைபெற்ற உலககிண்ணத் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது.

இதனையடுத்து, கருத்து தெரிவிக்கையிலேயே மெத்தியூஸ் இவ்வாறு தெரிவித்துள்ளதோடு இந்த தோல்வியை நாம் எதிர்பார்க்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர் அது தொடர்பாக கவலை கொள்ள தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.

2014 உலகக்கோப்பை

2014ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது உலகக்கோப்பையை இலங்கை அணி கைப்பற்றுவதற்கு மெத்தியூஸின் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்தது.

angelo-mathews-apology-for-t20-wc-failure-of-sl

குறித்த தொடரின் அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தார்.

மேலும், இன்றையதினம் (16.06.2024) நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை அணி நெதர்லாந்து அணியினை எதிர்கொள்கின்றது. இலங்கை அணி தொடரிலிருந்து வெளியேறிய போதிலும் புள்ளிபட்டியலில் சற்று முன்னேறும் நோக்கத்துடன் இந்தப் போட்டியில் களமிறங்கவுள்ளது.

சிறப்புச் செய்திகள்