இஸ்ரேலின் போர் அமைச்சரவை குறித்து நெதன்யாகு எடுத்துள்ள தீர்மானம்!

இஸ்ரேலிய (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) போர் அமைச்சரவையை கலைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

குறித்த அமைச்சரவையில் 6 உறுப்பினர்கள் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அதன் முக்கிய பிரமுகரான பென்னி கிரண்ட்ஸ் (Benny Grants) கடந்த வாரம் வெளியேறியுள்ளார்.

கருத்து மோதல் 

போர் அமைச்சரவையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் போருக்குப் பிறகு காசாவின் நிலை தொடர்பில் முன்வைக்கப்பட்ட கருத்து மோதலே பென்னி வெளியேறியமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. 

netanyahu-has-decided-to-dissolve-war-cabinet-

அதேவேளை, கடந்த வார இறுதியில் தெற்கு காசா பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 8 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

மேலும், கடந்த ஜனவரி மாதம் முதல் இஸ்ரேல் இராணுவம் சந்தித்த தாக்குதல்களில் மிக மோசமானது இது என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், நெதன்யாகு போர் அமைச்சரவையை கலைக்க முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சிறப்புச் செய்திகள்