ஆறுதல் வெற்றியுடன் உலகக் கிண்ண தொடரை நிறைவு செய்த இலங்கை!

இலங்கை அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையிலான T20 உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணி 83 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

குரோஸ் இஸ்லட் நகரில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

குறித்த இலக்கை நோக்கி பதில் இன்னிங்ஸை தொடர்ந்த நெதர்லாந்து அணியால் சகல விக்கட்டுக்களையும் இலந்து 16. 4 ஓவர்கள் 118 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

கடைசிப் போட்டி

குறித்த போட்டியின் ஆட்டநாயகனாக சரித் அசலன்க தெரிவாகியிருந்தார்.  

ஆறுதல் வெற்றியுடன் உலகக் கிண்ண தொடரை நிறைவு செய்த இலங்கை | T20 Wc 2024 2Nd Round

இதன்படி, இந்த தொடரில் இலங்கை பங்குபற்றிய கடைசிப் போட்டி இதுவாகும்.

இந்தப் போட்டி வெற்றியுடன் முடிந்தாலும், உலகக் கோப்பை கனவை கைவிட்டு இலங்கை அணி நாடு திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சிறப்புச் செய்திகள்