இலங்கை அணித் தலைவர் சமூக ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு!

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க(Wanindu Hasaranga) சமூக ஊடகங்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

நெதர்லாந்து அணிக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றியீட்டியதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ந்தும் தேசிய அணியை ஆதரித்து வருவதாகவும்,  சில நபர்கள் இலங்கை அணிக்கும் ரசிகர்களுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறியுள்ளார்.

ரசிகர்கள் ஆதரவு

எனினும் இலங்கை அணி தோற்றாலும் வெற்றி பெற்றாலும் ரசிகர்கள் தொடர்ந்தும் ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணித் தலைவர் சமூக ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு | Wandiu Accused Social Media
சிறப்புச் செய்திகள்