யாழில் சீல் வைத்து மூடப்பட்ட உணவகம்-வெளியான அதிர்ச்சி தகவல்!

  யாழ்ப்பாணம் மருதனார் மட பகுதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்றிற்கு அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர்.

அதேவேளை, வெதுப்பக உரிமையாளரை கடுமையாக எச்சரித்த நீதிமன்று, அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. சுன்னாகம், மருதனார் மடம் மற்றும் இணுவில் பகுதிகளில் உள்ள உணவு கையாளும் நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்தனர் .

யாழில் சீல் வைத்து மூடப்பட்ட உணவகம்! | Sealed Restaurant In Jaffna

54ஆயிரம் ரூபாய் தண்டம் 

இதன் போது உணவகம் ஒன்றும் வெதுப்பகம் ஒன்றும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கு நேற்று வியாழக்கிழமை (27) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது உரிமையாளர்கள் இருவரும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர்.

இதை அடுத்து , அவர்களை கடுமையாக எச்சரித்து, வெதுப்பக உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , உணவக உரிமையாளருக்கு 54ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. அத்துடன், உணவகத்தில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு உத்தரவிட்டது.  

சிறப்புச் செய்திகள்