எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் பெருந்தோட்ட மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல்
செய்வதற்குச் சூழ்ச்சி இடம்பெறுவதாக ஐக்கிய மக்கள்
கூட்டணியின் நுவரெலியா மாவட்ட
நாடாளுமன்ற வேட்பாளர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவ பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக்
குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இதன்போது கருத்துரைத்த மற்றுமொரு நாடாளுமன்ற வேட்பாளரான வேலுசாமி
இராதாகிருஸ்ணன், தங்களது தரப்பினரின் பெயர்கள் ஊழலில் ஈடுபட்டவர்களின் பட்டியலில் இல்லை
எனத் தெரிவித்தார்.