உலகக் கிண்ண கால்பந்து போட்டி 2026ஆம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய
நாடுகளில் நடைபெறவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் இன்று காலை நடந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா மற்றும்
பொலிவியா அணிகள் மோதின.
இதில் அர்ஜெண்டினா 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
காயத்துக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய அர்ஜெண்டினா அணித்தலைவர் லியோனல் மெஸ்சி
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 3 கோல்கள் அடித்து அசத்தியிருந்தார்.
அர்ஜெண்டினா பெற்ற 7ஆவது வெற்றி இதுவாகும்.