சில இறக்குமதி பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்படும்!

ஒக்ரோபர் மாதம் 14ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் சில இறக்குமதிப் பொருட்களுக்கான வரிகள் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நிதி அமைச்சராகவும் கடமையாற்றுகின்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டுதலின்படி முக்கிய இறக்குமதிகள் மீதான வரி கட்டமைப்பை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, ஒரு கிலோவிற்கு 25 சதம் என்ற சிறப்பு வணிக வரி மைசூர் பருப்பு மற்றும் மஞ்சள் பருப்பு ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு வரியாக மாலத்தீவு மீன்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய பொருட்களுக்கு ஒரு கிலோவிற்கு 302 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது.

புதிய அல்லது உறைந்த மீன்களுக்கு, எலும்பு நீக்கப்பட்ட மீன் மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட மீன்களுக்கு 10 வீத அல்லது ஒரு கிலோவிற்கு 400 ரூபாய், எது அதிகமோ அது விதிக்கப்படும் என அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply