ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மினுவாங்கொடை பகுதியில் பொலிஸ் அதிரடி படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 22 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply