கடந்த அரசாங்கங்களின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் எந்தத் தரத்தில் இருந்தாலும் அவர்களுக்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கு உரிய அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்